/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை முறையில் விவசாயம்; விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
இயற்கை முறையில் விவசாயம்; விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
இயற்கை முறையில் விவசாயம்; விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
இயற்கை முறையில் விவசாயம்; விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 10, 2024 10:13 PM
உடுமலை : செயற்கை ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து, முற்றிலும் இயற்கை சார்ந்த விவசாயம், அங்கக வேளாண்மை எனப்படுகிறது. வேளாண் துறை சார்பில், அங்கக வேளாண் நடைமுறைகளை பின்பற்றி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, நடப்பாண்டு நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருது பெற விரும்பும் விவசாயிகள், www.tnagrisnet.tn.gov.in இணையதளத்தில், வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்; இதற்கான பதிவு கட்டணம், 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
தகுதிகள் என்னென்ன?
குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில், இயற்கை சார் வேளாண் பயிர் சாகுபடி செய்திருக்கவேண்டும். முழு நேர இயற்கை விவசாயியாக இருக்கவேண்டும்; குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும்; உயிர்ம வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்.
மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக்குழு மற்றும் மாநில அளவிலான தேர்வுக்குழுவினர், வெற்றியாளர்களை தேர்வு செய்வர். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் பெயரில் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.
முதல்பரிசு 2.5 லட்சம் ரூபாய் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பதக்கம்; இரண்டாம் பரிசு, 1.5 லட்சம் ரூபாய் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பதக்கம்; மூன்றாம் பரிசு, 1 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.