/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத் தேர்வு எழுதியோருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்
/
பொதுத் தேர்வு எழுதியோருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்
பொதுத் தேர்வு எழுதியோருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்
பொதுத் தேர்வு எழுதியோருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்
ADDED : ஆக 02, 2024 05:18 AM
திருப்பூர் : மே, 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. மாவட்டத்தில் தேர்வெழுதிய, 23 ஆயிரத்து, 849 பேரில், 23 ஆயிரத்து, 242 பேர் தேர்ச்சி பெற்றனர்; 97.45 சதவீத தேர்ச்சியுடன், திருப்பூர், மாநிலத்தில் முதலிடம் பெற்றது. நேற்று பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டது. மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட கல்வித்துறை தரப்பில் இருந்து, 'சான்றிதழ் வழங்கும் முன், உயர்படிப்புக்கு எந்த கல்லுாரியில் இணைந்துள்ளீர்கள், எந்த பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளீர்கள் என்ற விபரம் கேட்டு பெற வேண்டும். உயர்கல்வியில் இணையாத மாணவர்கள் இருந்தால், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வழிகாட்டி மையத்துக்கு அனுப்பி, கல்லுாரி அல்லது டிப்ளமோ உட்பட ஏதேனும் ஒரு உயர்படிப்பில் இணைய வழிகாட்ட வேண்டும்,' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்படி பள்ளிகளில் மாணவ, மாணவியரிடம் விபரம் கேட்டறிந்து, பதிவேட்டில் எழுதிக் கொண்டனர்.