/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடை தாண்டி திருப்பணி: பக்தர்கள் உறுதி
/
தடை தாண்டி திருப்பணி: பக்தர்கள் உறுதி
ADDED : மே 27, 2024 12:56 AM

பல்லடம்;பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது.
இங்கு திருப்பணி மேற்கொள்வது குறித்து பக்தர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். சமூக ஆர்வலர் அண்ணாதுரை தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், முன்னாள் வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியம், பானு பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு பின் பக்தர்கள் கூறியதாவது:
நுாற்றாண்டுக்கு மேலாக கும்பாபி ஷேகம் நடத்தப்படவில்லை. ஐந்து ஆண்டுகளாக திருப்பணி மேற்கொள்ள முயற்சித்தும் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. நுழைவாயிலில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான ஐந்து கடைகளை அகற்றிவிட்டு திருப்பணி மேற்கொள்ள கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நுழைவாயிலுக்கு தேவையான, 26 அடி இடம் போக மீதமுள்ள இடம் கடைகளுக்கு ஒதுக்க வேண்டும். நுழைவாயிலில், மாற்று மதத்தினர் செருப்பு கடை நடத்த அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இது சட்ட விதிமுறைகளை மீறும் செயலாகும். கடை உரிமையாளர்கள் தங்கள் சொந்த செலவில் கடைகளை கட்டிக்கொண்டு தாங்களே அதை வைத்துக் கொள்வதாக தீர்மானித்துள்ளது தவறான முன் உதாரணம். என்ன தடை வந்தாலும் திருப்பணி மேற்கொண்டே ஆக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

