ADDED : செப் 01, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்,: சத்தியமங்கலத்தில் இருந்து மரத்துாள் ஏற்றிய லாரி திம்பம் மலைப்பாதை வழியாக, கர்நாடகா மாநிலம் மைசூருவுக்கு புறப்பட்டது.
நேற்று காலை இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.