/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பச்சிளம் குழந்தை மாயம் போலீசார் தீவிர விசாரணை
/
பச்சிளம் குழந்தை மாயம் போலீசார் தீவிர விசாரணை
ADDED : ஜூலை 03, 2024 02:11 AM
பல்லடம்;பல்லடத்தில், பிறந்து சில நாட்களே ஆன பச்சி ளம் குழந்தை மாயமான சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பல்லடம் நகராட்சி,பச்சாபாளையத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு, கடந்த, 10ம் தேதி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பெற்றோர்கள் குழந்தையை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளனர்.
தொடர்ந்து, கடந்த கடந்த இரண்டு நாட்களாக குழந்தை மாயமானது. சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பிறந்து, 20 நாட்களே ஆன நிலையில், குழந்தை மாயமான தகவல் பச்சாபாளையம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணத்துக்காக குழந்தை விற்கப்பட்டதா? அல்லது உண்மையிலேயே குழந்தை மாயமானதா என்பது தெரியவில்லை. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.