/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பச்சையம்மன் கோவில் ஆண்டு விழா வழிபாடு
/
பச்சையம்மன் கோவில் ஆண்டு விழா வழிபாடு
ADDED : ஆக 14, 2024 09:23 PM

உடுமலை: சின்னவீரம்பட்டி பச்சையம்மன் கோவிலில், ஆண்டுவிழா சிறப்பு வழிபாடு நடந்தது.
உடுமலை சின்னவீரம்பட்டி பச்சையம்மன் கோவிலில், மூன்றாமாண்டு விழாவையொட்டி, மூன்று நாட்கள் சிறப்பு பூஜை நடந்தது. முதல் நாளில் பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.
தொடர்ந்து சக்தி கும்பம் அழைப்பது, முளைப்பாரி மற்றும் சாமி அழைத்தல் நிகழ்வுகள் நடந்தன. மறுநாள் பக்தர்கள் பூவோடு மற்றும் மாவிளக்கு எடுத்து வந்து வழிபாடு செய்தனர். மாலையில் பச்சையம்மனுக்கு, சிறப்பு அபிேஷக ஆராதனையுடன் தீபாராதனை நடந்தது. நேற்று, மாலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அம்பாளுக்கு பாலபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.