/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழனியப்பா பள்ளி 'ஸ்கேட்டிங்'கில் அபாரம்
/
பழனியப்பா பள்ளி 'ஸ்கேட்டிங்'கில் அபாரம்
ADDED : ஆக 01, 2024 01:27 AM

அவிநாசி : திருப்பூர், கோவை சகோதயா ஸ்கேட்டிங் போட்டி திருப்பூர் ஸ்பிரிங் மவுண்ட் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது. இதில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற அவிநாசி, பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பல்வேறு பதக்கங்களை வென்றனர். 12 வயது பிரிவில் ஓவின் சாய் வாசன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம், 14 வயது பிரிவில் அபிநந்தன் சுபராஜ் மூன்று வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம், 12 வயது மாணவியர் பிரிவில் நிதர்சனா வெண்கல பதக்கமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்று பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி செயலாளர் மாதேஸ்வரி ராஜ்குமார், பள்ளி முதல்வர் வித்யாசங்கர் ஆகியோர் பாராட்டடினர்.