/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம்- - உடுமலை ரோடு விரிவாக்கம் செய்ய திட்டம்
/
பல்லடம்- - உடுமலை ரோடு விரிவாக்கம் செய்ய திட்டம்
ADDED : ஆக 01, 2024 01:27 AM

பல்லடம்: பல்லடம் - உடுமலை ரோடு, மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரோடு, கேரள மாநிலம் மூணாறுடன் இணைகிறது.
தினமும், பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கின்றன. ரோட்டில், 45 கி.மீ., துாரத்துக்கு விரிவாக்கம் செய்ய கடந்த ஆண்டே திட்டமிடப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது, இதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வடுகபாளையம்- - உடுமலை வரையிலான, 45 கி.மீ., ரோடு, ஏற்கனவே, 10 மீ., அகலம் உள்ளது. இதனை, 15.2 மீ., விரிவாக்கம் செய்ய திட்டம் உள்ளது.
மைய தடுப்புகளுடன் கூடிய நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படலாம். இதற்காக, முதல் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வுப் பணிகள் முடிந்து அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்படும்,' என்றனர்.