/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் அரசு கல்லுாரி கலந்தாய்வு அட்டவணை
/
பல்லடம் அரசு கல்லுாரி கலந்தாய்வு அட்டவணை
ADDED : மே 31, 2024 01:41 AM
பல்லடம்;பல்லடம் அரசு கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான பொதுவான கலந்தாய்வு நடக்கிறது. ஜூன் 10 அன்று, 400ல் இருந்து 303 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், ஜூன் 11 அன்று, 302ல் இருந்து 274 மதிப்பெண் பெற்றவர்களுக்குமான கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.
ஜூன் 12 அன்று, தமிழ்ப்பாடத்தில் மட்டும், 100 முதல் 75 மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களும் பி.ஏ., தமிழுக்கும், ஆங்கில பாடத்தில் மட்டும், 100 முதல் 55 மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களும் பி.ஏ., ஆங்கிலத்துக்கான கலந்தாய்விலும் பங்கேற்கலாம். ஜூன் 13ம் தேதி, 273 முதல் 263 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக காலை, 9:00 மணிக்கு சேர்க்கை அரங்கில் இருக்க வேண்டும். தாமதமாக வருபவர்கள், அந்நேரத்தில் சென்று கொண்டிருக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் சேர்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.