/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லாங்குழி ரோடு; பொதுமக்கள் தவிப்பு
/
பல்லாங்குழி ரோடு; பொதுமக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 26, 2024 10:52 PM

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, 25 வது வார்டு பாட்டையப்பா நகரில் அடிப்படை வசதி கேட்டு, மாநகராட்சி கவுன்சிலர் தங்கராஜ், தலைமையில் அப்பகுதியினர், உதவி கமிஷனர் கனகராஜை சந்தித்து கொடுத்த மனு:
பாட்டையப்பா நகரில் ஆறு வீதிகள் உள்ளன. 300 வீடுகள் உள்ளன. இப்பகுதியில், எட்டு ஆண்டு களுக்கு முன் ரோடு போடப்பட்டது. தற்போது, அனைத்து ரோடுகளும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ரோட்டை சீரமைத்து தர வேண்டும். பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் வீட்டு இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது.
சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், அங்குள்ளவர்கள் வீட்டு முன் உறிஞ்சு குழி அமைத்து கழிவுநீரை தேக்கி வருகின்றனர். சில வீடுகளில் உறிஞ்சு குழி நிறைந்து கழிவு நீர் வீதிகளுக்கு வருகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, உடனடியாக பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு வழங்க வேண்டும்.