/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் வரைபடம் தயார்'
/
'பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் வரைபடம் தயார்'
ADDED : ஏப் 15, 2024 10:52 PM
திருப்பூர்:திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பெரிய எதிர்பார்ப்போடு வரவேற்கின்றனர். எங்களின் வாக்குறுதிகளை மக்களிடம் தெரியப்படுத்தி வருகிறோம். மிகுந்த எழுச்சியோடு மக்கள் தங்கள் பிரச்னைகளை தெரியப்படுத்துகின்றனர்.
முதல், நுாறு வாக்குறுதி களை அறிவித்து இருந்தோம். மீண்டும், நுாறு வாக்குறுதிகளுடன் ஒரு புத்தகத்தை வெளியிட இருக்கின்றோம். பல்வேறு விஷயங்களை கொண்டு வந்துள்ளோம்.
இரு சட்டசபை தொழிற்சாலை நிறைந்த பகுதி. மீதமுள்ள, நான்கு தொகுதி விவசாயம், அதை சார்ந்து பகுதிகளாக உள்ளது. நெசவாளர் நலன், நீர் வளம், மகளிர் நலம், இளைஞர் நலம், மாசு கட்டுப்பாடு, கல்வி, மருத்துவம், மின்சாரம், பொது நலன் போன்ற பல்வேறு அம்சம் நிறைந்துள்ளது.
பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் குறித்து ப்ளூ பிரின்ட் ஒன்று தயார் செய்துள்ளோம். நீர் மேலாண்மை குறித்து பல்வேறு வல்லுனர்களுடன் ஆய்வு செய்து விபரங்களை தொகுத்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளோம். தொலைநோக்கு திட்டங்களை எடுத்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

