sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பி.ஏ.பி., கிளை கால்வாய் துார் வார ரூ.2.51 கோடி ஒதுக்கீடு

/

பி.ஏ.பி., கிளை கால்வாய் துார் வார ரூ.2.51 கோடி ஒதுக்கீடு

பி.ஏ.பி., கிளை கால்வாய் துார் வார ரூ.2.51 கோடி ஒதுக்கீடு

பி.ஏ.பி., கிளை கால்வாய் துார் வார ரூ.2.51 கோடி ஒதுக்கீடு


ADDED : ஆக 05, 2024 11:59 PM

Google News

ADDED : ஆக 05, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமான பி.ஏ.பி., கிளைக்கால்வாய் துார் வாரும் பணிக்கு, நுாறு நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், 2.51 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் பி.ஏ.பி., பாசனத் திட்டத்தால் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில், புதுப்பாளையம் கால்வாய், பரம்பிக்குளம் பிரதான கால்வாய், வலது பகிர்மானக்கால்வாய் மற்றும் அதன் உப பகிர்மானக் கால்வாய்களில், இரண்டாம் மண்டலப் பாசனம் துவங்கவுள்ளது.

கால்வாய் கரைகளில் வளர்ந்துள்ள தேவையற்ற தாவரங்கள், கால்வாய்களில் படிந்துள்ள மண் படிமானங்களை அகற்றுவது தொடர்பாக, கலெக்டர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து, விவசாயிகளின் கருத்துகளையும் கேட்டனர். தேசிய நுாறுநாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், இப்பணிகளை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம், அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, காங்கயம் வட்டாம், மடத்துக்குளம், குடிமங்கலம், உடுமலை, தாராபுரம், குண்டடம், வெள்ளகோவில் என பகுதிகளில், மொத்தம், 184 பணிகள், 2.51 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us