/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்
/
கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்
ADDED : ஜூலை 03, 2024 02:48 AM

உடுமலை;உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம் நடந்தது. இதில் திரளான பெற்றோர் பங்கேற்றனர்.
உடுமலை - பழநி ரோட்டில் ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி அமைந்துள்ளது. இக்கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார்.
கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். கல்லுாரி பொறுப்பு முதல்வர் பரமேஸ்வரி வரவேற்றார்.
கரூர் கிரசென்ட் மெட்ரிக் பள்ளி நிர்வாக இயக்குனர் சாகுல் ஹமீது, 'நாளை நமதே' என்ற தலைப்பில், கல்வியின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் மற்றும் பல்வேறு தகவல்களை கூறி, மாணவியரை ஊக்குவித்தார்.
முன்னாள் மாணவியர் நந்தினி, உமா நந்தினி, மகுடீஸ்வரி கல்லுாரியின் சிறப்புகள் குறித்து பேசினர். இரண்டாமாண்டு மாணவி சுமையா, வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கல்லுாரியில் மாணவியரின் பெற்றோர், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெற்றோர் ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி நன்றி தெரிவித்தார்.