/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழற்கூரை அமைக்கவில்லை; வெயிலில் பயணியர் தவிப்பு
/
நிழற்கூரை அமைக்கவில்லை; வெயிலில் பயணியர் தவிப்பு
ADDED : ஏப் 29, 2024 09:20 PM
உடுமலை:சின்னவீரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில், பஸ் ஸ்டாப் நிழற்கூரை இல்லாமல் பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது இந்திரா நகர் பகுதி. இப்பகுதியில் நுாற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
நாள்தோறும் அப்பகுதியிலிருந்து, பலரும் உடுமலை, தாராபுரம் பகுதிக்கு செல்கின்றனர். உடுமலை - தாராபுரம் ரோடு விரிவாக்கப்பணிகளையொட்டி, இந்திரா நகர் பகுதி பஸ் ஸ்டாப் நிழற்கூரையும் அப்புறப்படுத்தப்பட்டது.
தற்போது விரிவாக்கப்பணிகள் முழுமையாக முடிந்து, போக்குவரத்தும் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் அப்புறப்படுத்தப்பட்ட நிழற்கூரை இன்னும் அமைக்கப்படவில்லை.
நிழற்கூரை இல்லாமல் நாள்தோறும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கோடை வெப்பத்திலும், வேறுவழியில்லாமல் திறந்த வெளியில் காத்திருக்க வேண்டியுள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வயது முதியோர் இவ்வாறு அதிக நேரம் வெப்பத்தில் நின்று காத்திருப்பதால், உடல்நலம் பாதிக்கப்படும் சூழலும் ஏற்படுகிறது.
பயணிகளுக்கான நிழற்கூரை அமைப்பதற்கு உள்ளாட்சி நிர்வாகத்தினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

