/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தையல் கலைஞர்கள் சங்க கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
தையல் கலைஞர்கள் சங்க கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்
தையல் கலைஞர்கள் சங்க கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்
தையல் கலைஞர்கள் சங்க கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஆக 07, 2024 10:57 PM

உடுமலை : தையல் நல வாரியத்துக்கு, கட்டுமான நல வாரியத்தில் வழங்குவதை போல பணப்பயன்களை அரசு வழங்க வேண்டும் என, திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் தொழிலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலையில், திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்.
தொழிற்சங்க கொடியை மூத்த உறுப்பினர் ரத்தினசாமி ஏற்றி வைத்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார். சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வேலுசாமி கோரிக்கைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், தையல் கலைஞர்கள் பயன்படுத்தும், மூலப்பொருளுக்கு ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும். தையல் நலவாரியத்துக்கு, கட்டுமான நல வாரியத்தில் வழங்குவதை போல, பணப்பயன்கள் வழங்க வேண்டும்.
பஸ்களில், தையல் கலைஞர்கள் துணிகளை எடுத்துச்செல்லும் போது, சுமை கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். தையல் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்துக்கு புது நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.