/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
- பாட்டம் - 100 சதவீதம் வசூல் இலக்கு; பேரூராட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி
/
- பாட்டம் - 100 சதவீதம் வசூல் இலக்கு; பேரூராட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி
- பாட்டம் - 100 சதவீதம் வசூல் இலக்கு; பேரூராட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி
- பாட்டம் - 100 சதவீதம் வசூல் இலக்கு; பேரூராட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி
ADDED : டிச 06, 2024 04:49 AM
திருப்பூர், : 'திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில், இம்மாத (டிச.,) இறுதிக்குள், 100 சதவீதம் சொத்து வரி வசூலித்து முடிக்க வேண்டும்' என, பேரூராட்சிகளின் உதவி இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பேரூராட்சிக்கும், அதன் தற்போதைய வரி வசூல் சதவீதத்தை அடிப்படையாக கொண்டு, வரி வசூல் சதவீதம் நிர்ணயம் செய்து, பேரூராட்சிகளின் உதவி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, அவிநாசி பேரூராட்சியில், இம்மாத இறுதிக்குள், 70 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும்; அவ்வாறு, வரி வசூலிக்கப்படாத பட்சத்தில், தலைமை எழுத்தர், இளநிலை உதவியாளர் மற்றும் வரி வசூலிப்பவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பிறப்பிக்கப்படும். வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்புகளை துண்டித்து, அதுதொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இம்மாதம், 15ம் தேதிக்குள், சாமளாபுரம் மற்றும் குன்னத்துார் பேரூராட்சியில், 75 சதவீதம்; முத்துார், ஊத்துக்குளி பேரூராட்சிகளில், 85 சதவீதம்; ருத்ராவதி பேரூராட்சியில், 80 சதவீதம்; கொமரலிங்கம், கணியூர், சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில், 100 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்துள்ளனர். இதுவரை, 75 சதவீதத்துக்கு மேல் வரி வசூல் செய்துள்ள பேரூராட்சிகளுக்கு, இம்மாதம் டிச., இறுதிக்குள், 100 சதவீதம் இலக்கை எட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு, வரி வருவாயை பெருக்க சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை உயர்த்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ''திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி நிர்வாகங்கள், இம்மாத இறுதிக்குள் 100 சதவீதம் சொத்து வரியை வசூலித்து முடித்து விட வேண்டும்'' என, பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

