ADDED : ஆக 04, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பவளக்கொடி கும்மியாட்டக் குழுவினரின் 141வது அரங்கேற்ற விழா தலைவர் மற்றும் ஆசிரியர் விஸ்வநாதன் ஒருங்கிணைப்பில் நடந்தது. அவிநாசி, பழங்கரை, திருமுருகன் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் - பெண்கள் என கலந்து கொண்டு கும்மியாட்டம் ஆடினர்.
இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வரலாற்று தொடர்புடைய கிராமிய பாடலுக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் பரமசிவம், மணி, கனகராஜ், ரேணுகாதேவி, தினேஷ்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். திருமுருகன்பூண்டி 5வது வார்டு செயலாளர் கோமதி, குழந்தைவேல், புவனேஸ்வரி, அசோக் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தனர். கும்மியாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.