/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூலுவபட்டி 'ரிங்' ரோட்டில் நடைபாதை அமைப்பு
/
பூலுவபட்டி 'ரிங்' ரோட்டில் நடைபாதை அமைப்பு
ADDED : மே 31, 2024 11:50 PM

திருப்பூர்;பூலுவபட்டி ரிங் ரோட்டில் பாதசாரிகள் வசதிக்காக 'பிளை ஆஷ்' கற்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் நகரப்பகுதியை சுற்றிலும் சில இடங்களில் 'ரிங்' ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இந்த ரோடுகள் அமைத்து, பராமரிக்கப்படுகிறது. இந்த ரோடுகளை போக்குவரத்து வசதிக்காக அகலப்படுத்தும் விதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில், அவிநாசி ரோடு - திருமுருகன் பூண்டியிலிருந்து பி.என், ரோடு, ஊத்துக்குளி ரோடு, காங்கயம் ரோடு ஆகிய பகுதிகளைச் சென்று சேரும் வகையில் 'ரிங்' ரோடு உள்ளது. இந்த ரோடும் விரிவாக்கம் செய்யும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பூலுவபட்டி நால் ரோடு பகுதியிலிருந்து நெருப்பெரிச்சல் வரையில் ரோடு விரிவாக்கப் பணி நடந்தது.
இப்பணியின் போது, உரிய இடங்களில் மழை நீர் வடிகால் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. தற்போது பூலுவபட்டி நால் ரோடு பகுதியிலிருந்து மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பகுதி வரை,பிளை ஆஷ் கற்கள் பதித்து நடைமேடை அமைக்கும் பணி நடக்கிறது.

