/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர் நியமனத்தில் கவனம் செலுத்தணும்! பள்ளி மேலாண்மைக் குழு எதிர்பார்ப்பு

ADDED : ஆக 20, 2024 10:45 PM
திருப்பூர்:மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், பெற்றோர் உட்பட, 20 உறுப்பினர்கள் கொண்ட பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டது.
இதன் பதவிக் காலம், கடந்த ஜூலையுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, 2024 - 2026ம் ஆண்டுக்கான புதிய தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளர்ச்சியில் ஆர்வமுடன் செயல்படும் மேலாண்மைக் குழுவினர், வகுப்பறை கட்டடங்களை பொலிவூட்டுவது, ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணி மேற்கொண்டனர். இதனால், சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இருப்பினும், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது தென்படுகிறது.
பள்ளி மேலாண்மைக்குழுவினர் சிலர் கூறியதாவது:
பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக பள்ளிகளை வளர்ச்சியடைய செய்வது, வரவேற்க்கத்தக்கது. அதேநேரம், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் இல்லை. பி.டி.ஏ., வாயிலாக ஓரிரு ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க முடியுமே தவிர, தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாது. ஆசிரியர் பற்றாக்குறையால், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர். எனவே, ஆசிரியர் நியமன விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.