/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம்; துாய்மைப்பணியாளர்கள் வேதனை
/
ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம்; துாய்மைப்பணியாளர்கள் வேதனை
ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம்; துாய்மைப்பணியாளர்கள் வேதனை
ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம்; துாய்மைப்பணியாளர்கள் வேதனை
ADDED : மே 09, 2024 11:31 PM
உடுமலை;பள்ளி துாய்மைப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால் பணிகள் பாதிக்கப்படுகிறது.
ஊராட்சி பள்ளிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு, மத்திய அரசின் துாய்மைபாரத திட்டத்தின் கீழ் தற்காலிகமாக துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துவக்கப்பள்ளிகளுக்கு தலா, 1000 ரூபாய், நடுநிலைப்பள்ளிக்கு, 1,500, உயர்நிலைப்பள்ளிக்கு, 2,250 ரூபாய், மேல்நிலைப்பள்ளிக்கு, 3,000 ரூபாய் என அவர்களுக்கு வழங்கப்படுகிறது.இப்பணியாளர்களுக்கான ஊதியம் வழங்குவதில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது. திட்டத்தின் துவக்கத்தில், மூன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது, பல மாதங்களாக ஊதியம் நிறுத்தப்படுவதால், பள்ளிகளின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. பணியாளர்களுக்கும் பொருளாதார சிக்கல் ஏற்படுவதால், வேறு பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், கடந்த டிச., மாதம் முதல் 7 மாதங்களாக ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
துாய்மைப்பணியாளர்களுக்கான ஊதியம், ஆண்டுக்கு ஒரு முறை என்ற கணக்கில் தான் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையால் பள்ளிகளில் துாய்மை பணிபாதிக்கப்படுகிறது. பெற்றோரும், இதனால் அதிருப்தி அடைகின்றனர். பல்வேறு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு, இப்பிரச்னை குறித்தும் நடவடிக்கை எடுக்க, பெற்றோரும் வலியுறுத்துகின்றனர்.