/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி செலுத்தினால் ஊக்கத் தொகை கிடைக்கும்!
/
சொத்து வரி செலுத்தினால் ஊக்கத் தொகை கிடைக்கும்!
ADDED : மே 26, 2024 12:22 AM
திருப்பூர் : இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை முன்னதாக செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத் தொகை பெறலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் அறிக்கை:மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியினை முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டு துவங்கிய ஒரு மாதத்துக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
அவ்வகையில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை, ஏப். 30 ம் தேதிக்குள்ளும், இரண்டாவது அரையாண்டுக்கான வரியை அக்., 31 ம் தேதிக்குள் செலுத்தினால் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இரண்டாம் அரையாண்டுக்கான வரியை, மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், கணினி வரி வசூல் மையங்களில் ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்தலாம். வங்கி வரைவோலை, டெபிட் மற்றும் கிரடிட் கார்டு, வங்கி ஆன்லைன் சேவை வாயிலாகவும் செலுத்தலாம்.காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை வார நாட்களில் செலுத்தலாம்.இணைய தளம் வாயிலாக ஆன்லைனில்,https://tnurbanepay.tn.gov.in என்ற முகவரியில் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.