ADDED : மே 24, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசியில், பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள மின் கம்பத்தில் இரை தேடி பறந்து வந்த ஆண்மயில் ஒன்று மோதியது.
அதில், மின் கம்பியில் இறக்கை பட்டதால் மோதிய வேகத்தில் மின்சாரம் தாக்கப்பட்ட மயில் தூக்கி வீசப்பட்டது.
இதில் மயில் பலியானது. வனக் காப்பாளர் கணபதி செல்வம், மான் காவலர் வெங்கடேசன் ஆகியோர் இறந்த மயிலின் உடலை மீட்டு அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.