/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெம் ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் ஆண்டு விளையாட்டு விழா
/
பெம் ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் ஆண்டு விளையாட்டு விழா
ADDED : செப் 01, 2024 01:47 AM

திருப்பூர்;திருப்பூர், காங்கயம் சாலையில் உள்ள பெம் ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் பள்ளியின் 14ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. நல்லுார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, விளையாட்டுப்போட்டிகளை துவக்கிவைத்தார்.
தேசியக்கொடியை பள்ளி முதல்வர் விஜய் கார்த்திகேயன் ஏற்றிவைத்தார். ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை நீல நிற அணியும், இரண்டாம் இடத்தை மஞ்சள் நிற அணியும் பெற்றன. பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், போட்டிகளை நடத்தினர். ஒட்டுமொத்த சாம்பியன் அணி மற்றும் வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை பள்ளித்தாளாளர் விஷ்ணு பழனிசாமி, இணைச்செயலாளர் டாக்டர் சரண்யா ஆகியோர் வாழ்த்தினர்.