/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ.பி.எப்., பென்சன்தாரர்களுக்கு ஓய்வூதியம்; முதல்வருக்கு மனு
/
இ.பி.எப்., பென்சன்தாரர்களுக்கு ஓய்வூதியம்; முதல்வருக்கு மனு
இ.பி.எப்., பென்சன்தாரர்களுக்கு ஓய்வூதியம்; முதல்வருக்கு மனு
இ.பி.எப்., பென்சன்தாரர்களுக்கு ஓய்வூதியம்; முதல்வருக்கு மனு
ADDED : மார் 11, 2025 04:14 AM

உடுமலை, : இ.பி.எப்., பென்சன்தாரர்களுக்கு, கேரள மாநிலத்தை போல், மாத உதவித்தொகை வழங்க வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டையில் மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.
நுாற்பாலைகள், பஞ்சாலைகள், சர்க்கரை ஆலை, தேயிலை எஸ்டேட் என தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, இ.பி.எப்., வாயிலாக, மாத ஓய்வூதியம், ரூ.500 முதல், 800 ரூபாய் வரை மட்டுமே கிடைத்து வருகிறது.
கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது, தொழிலாளர்கள் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என தெரிவித்தும், நடைமுறைக்கு வரவில்லை.
அரசு செயல்படுத்தும் முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட எந்த விதமான திட்டங்களிலும், பயன்பெற முடியாத நிலையில், தமிழகம் முழுவதும் பல லட்சம் தொழிலாளர்கள், வயதான காலத்தில் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதித்து வருகின்றனர்.
எனவே, கேரள அரசு செயல்படுத்தி வருவது போல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாதம் ரூ. 1,600 வழங்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என தமிழக அரசை வலியுறுத்தி, முதல்வருக்கு மனு அனுப்பும் இயக்கம் நேற்று துவங்கியது.
மாநிலம் முழுவதும் உள்ள பென்சன்தாரர்கள் தொடர்ந்து, அஞ்சல் கடிதம் அனுப்பி வருவதாக, இ.பி.எப்.,பென்சன்தாரர் நலச்சங்க தலைவர் வேலாயுதம், செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தெரிவித்தனர்.