ADDED : ஆக 06, 2024 11:26 PM
திருப்பூர் : தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மருத்துவ காப்பீடு திட்ட குளறுபடிகளை களைய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணை தலைவர் மணிவேலு தலைமை வகித்தார். பொருளாளர் ஆறுமுகம், வட்டக் கிளை தலைவர்கள் தில்லையப்பன், ராஜன் முன்னிலை வகித்தனர்.
பணமில்லாத மருத்துவம் அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர் ஓய்வூதியர் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
n திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். வட்டக்கிளை நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன் (அவிநாசி), பாஸ்கரன் (ஊத்துக்குளி), குருராஜன் (திருப்பூர்), பழனிசாமி (பல்லடம்), மாவட்ட துணை தலைவர் மாயன்குட்டி ஆகியோர், கோரிக்கையை விளக்கி பேசினர். அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் நிசார் அகமது சிறப்புரையாற்றினார்.