/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூட்டிய வீடுகளை உடைத்து திருட்டு; தொடர் சம்பவங்களால் மக்கள் அச்சம்
/
பூட்டிய வீடுகளை உடைத்து திருட்டு; தொடர் சம்பவங்களால் மக்கள் அச்சம்
பூட்டிய வீடுகளை உடைத்து திருட்டு; தொடர் சம்பவங்களால் மக்கள் அச்சம்
பூட்டிய வீடுகளை உடைத்து திருட்டு; தொடர் சம்பவங்களால் மக்கள் அச்சம்
ADDED : மார் 09, 2025 11:16 PM

உடுமலை; உடுமலை அருகே, பூட்டியிருந்த வீடுகளின் கதவை உடைத்து, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு அதிஷ்டா கார்டன். இப்பகுதியில், பைனான்ஸ் தொழில் செய்து வரும் பொன்னுசாமி, 55; வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு, உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றுள்ளார். இரவு வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 7.25 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
பொன்னுசாமி வீட்டின் அருகே, வசிப்பவர் புவனேஸ்வரன், 33; உடுமலையில் 'சிப்ஸ்' கடை நடத்தி வருகிறார். இவரும் நேற்று முன்தினம் கடையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 51 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பூட்டிய வீடுகளை குறிவைத்து திருடும் கும்பல் உடுமலை பகுதியில், தொடர்ந்து கைவரிசை காட்டி வருவதால், மக்களிடையே அச்சம் நிலவுகிறது.