/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீருக்காக அலைமோதும் மக்கள்; துங்காவியில் தொடரும் அவலம்
/
குடிநீருக்காக அலைமோதும் மக்கள்; துங்காவியில் தொடரும் அவலம்
குடிநீருக்காக அலைமோதும் மக்கள்; துங்காவியில் தொடரும் அவலம்
குடிநீருக்காக அலைமோதும் மக்கள்; துங்காவியில் தொடரும் அவலம்
ADDED : செப் 17, 2024 10:09 PM
உடுமலை : கூட்டுக்குடிநீர் திட்டத்தில், வினியோகம் பாதிப்பால், துங்காவி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து மக்கள் பாதித்து வருகின்றனர்.
மடத்துக்குளம் ஒன்றியம், துங்காவி ஊராட்சியில், துங்காவி, சீலநாயக்கன்பட்டி, பாறையூர், குமாரமங்கலம், பெங்களூர், மலையாண்டிபட்டணம், வெங்கிட்டாபுரம் கிராமங்கள் உள்ளன.
கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.
இதனால், அனைத்து கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. போதிய மழை இல்லாமல், உள்ளூர் நீராதாரங்களான போர்வெல்களிலும் நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால், குடிநீருக்காக மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், நீண்ட காலமாக முறையாக குடிநீர் வினியோகிக்கப்படுதில்லை. அடிக்கடி பிரதான குழாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களை தெரிவித்து, குடிநீர் வினியோகத்தை நிறுத்தி விடுகின்றனர்.
பல முறை புகார் தெரிவித்தாலும், குடிநீர் வடிகால் வாரியம் தரப்பில், முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்பிரச்னை குறித்து, விசாரணை நடத்தி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.