/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முப்பதே நிமிடத்தில் ரூ.2.10 லட்சம் அரசுப் பள்ளிக்கு மக்கள் தாராளம்
/
முப்பதே நிமிடத்தில் ரூ.2.10 லட்சம் அரசுப் பள்ளிக்கு மக்கள் தாராளம்
முப்பதே நிமிடத்தில் ரூ.2.10 லட்சம் அரசுப் பள்ளிக்கு மக்கள் தாராளம்
முப்பதே நிமிடத்தில் ரூ.2.10 லட்சம் அரசுப் பள்ளிக்கு மக்கள் தாராளம்
ADDED : செப் 02, 2024 12:09 AM
அனுப்பர்பாளையம்:திருப்பூர் அருகே அரசுப்பள்ளியில் பேபர் பிளாக் தளம் அமைக்க, முப்பதே நிமிடத்தில் 2.10 லட்சம் ரூபாயை பொதுமக்கள் வழங்கினர்.
திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதற்கு மேற்பார்வையாளராக சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனி மாநகராட்சி தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் கணேஷ் குமார் நியமிக்கப்பட்டார். தலைவராக பூங்கொடி தேர்வானார்.
பள்ளிக்கு பேபர் பிளாக் தளம் அமைக்க பள்ளி சார்பில் கோரப்பட்டது. இந்தப் பொறுப்பை பள்ளி மேலாண்மை குழுவிடம் ஒப்படைத்த மேற்பார்வையாளர் நாகராஜ் கணேஷ் குமார், தனது பங்களிப்பாக மாதொருபாகனார் அறக்கட்டளை சார்பில், 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார்.
இதைப் பார்த்த பள்ளிக்கு வந்திருந்த அப்பகுதி பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நிதி வழங்க தொடங்கினர். முப்பதே நிமிடங்களில் 2.10 லட்சம் ரூபாய் வசூலானது. இதைக் கொண்டு பள்ளிக்கு பேபர் பிளாக் தளம் அமைக்க நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.