/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
16 கிலோ கஞ்சா பறிமுதல் பீகாரை சேர்ந்தவர்கள் கைது
/
16 கிலோ கஞ்சா பறிமுதல் பீகாரை சேர்ந்தவர்கள் கைது
ADDED : மே 11, 2024 11:31 PM
திருப்பூர் : திருப்பூரில் போலீசார் நடத்திய சோதனையின் போது 16 கிலோ கஞ்சா மூட்டைகளை பனியன் நிறுவனத்தில், பதுக்கி வைத்திருந்த மூன்று பேர் சிக்கினர்.
திருமுருகன்பூண்டி போலீசாருக்கு கிடைந்த ரகசிய தகவலின் பேரில், நேற்று மாலை வஞ்சிபாளையம் அருகே கணியாம்பூண்டி பகுதியில் சோதனை நடத்தினர். அதில், ஒரு பனியன் நிறுவனத்தை சோதனை செய்ததில், 16 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரிந்தது.
இதனை தொடர்ந்து, பனியன் நிறுவன மேலாளர், பீஹாரைச் சேர்ந்த, கானியடுகானியா, 23, டெய்லராக உள்ள ராகுல்குமார், 24, மதுரையைச் சேர்ந்த தவம், 44 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஒடிசாவிலிருந்து ஆட்கள் மூலம் கஞ்சா மூட்டைகளைக் கொண்டு வந்து, பனியன் நிறுவனத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், சிறையில் அடைத்தனர்.