/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் எதிர்ப்பு; அறிவிப்பு பலகை அகற்றம்
/
மக்கள் எதிர்ப்பு; அறிவிப்பு பலகை அகற்றம்
ADDED : ஜூலை 08, 2024 11:13 PM
பல்லடம்:பல்லடம் நகராட்சி, பச்சாபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இதனை ஒரு சமுயாத்தினர் நிர்வகித்து வரும் நிலையில், அற நிலையத்துறைக்கு சொந்தமானது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, நேற்று இரவு அறநிலையத்துறை சார்பில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அகற்றப்பட்டது.
அப்பகுதியினர் கூறுகையில், 'பல ஆண்டுகளாக கோவிலை நாங்கள் நிர்வகித்து வருகிறோம். கோவில் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
வழக்கு நடந்து வரும் சூழலில் அறிவிப்பு பலகையை அதிகாரிகள் எப்படி வைக்கலாம்,' என்றனர்.