/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் பதிக்க தோண்டிய குழி மூடாததால் மக்கள் அவதி
/
குழாய் பதிக்க தோண்டிய குழி மூடாததால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 18, 2024 11:32 PM

திருப்பூர்:திருப்பூர், வீரபாண்டியிலிருந்து பூங்கா நகர் வழியாக கோவில்வழி சென்று சேரும் வகையில், மாநகராட்சிக்கு சொந்தமான ரோடு உள்ளது. பல்லடம் ரோடு - தாராபுரம் ரோட்டை இணைக்கும் ரோடு என்பதால் இந்த ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகம்.
இந்த ரோடு நீண்ட இழுபறிக்குப் பின் கடந்த ஒன்றரை ஆண்டு முன் புதிதாக அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ரோடு வழியாக, 4வது குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இப்பணி முடிவடைந்துள்ளது. குழாய் பதித்த பின் அதற்காக தோண்டிய குழியில் மண் போட்டு மூடப்பட்டது.
ஆனால், தார் ரோடு அமைக்கவில்லை. இதனால், இந்த ரோடு குண்டும் குழியுமாக மாறி அவல நிலையில் காணப்படுகிறது. இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சொல்ல முடியாத சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.வாகனங்கள் பழுதடைவதும் சிறு விபத்துகள் ஏற்படுவதும் சகஜமாக உள்ளது. ரோடு பாதியளவு முழுமையாக சேதமடைந்து கிடப்பதால், கடும் நெருக்கடி நிலவுகிறது. எனவே, இந்த ரோட்டை முழுமையாக சீரமைக்க வேண்டும்.