/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழற்கூரை இல்லாததால் மக்கள் வெயிலில் தவிப்பு
/
நிழற்கூரை இல்லாததால் மக்கள் வெயிலில் தவிப்பு
ADDED : மே 30, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை தளி ரோடு வழியாக, திருமூர்த்திமலை, அமராவதி அணை, சின்னார் போன்ற சுற்றுலா தலங்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும் பல்வேறு கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இந்த ரோட்டில் யூனியன் பஸ் ஸ்டாப் பிரதானமாக உள்ளது. பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இதை பயன்படுத்துகின்றனர். இங்கு நிழற்கூரை இல்லாததால், மக்கள் வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டியதுள்ளது. எனவே, இந்த பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.