/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாழை இலையுடன் மனு கொடுத்த மக்கள்
/
வாழை இலையுடன் மனு கொடுத்த மக்கள்
ADDED : மார் 04, 2025 06:46 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உணவகங்களில், சூடான இட்டிலி, பரோட்டா, சிக்கன் உள்ளிட்ட உணவுப்பொருட்களை பார்சல் செய்வதற்கு பாலிதீன் பேப்பர் பயன்படுத்துகின்றனர்.
கொதிக்க கொதிக்க டீ, காபியையும் ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் கவர்களில் கட்டிக்கொடுக்கின்றனர்.
ஒரு பார்சல் சாப்பாட்டுக்கு, சாதத்துக்கு ஒரு கவர், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், மோர், பொரியல் என, ஆறு முதல் ஏழு பாலிதீன் கவர்கள் பார்சலுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.
இதனால், பயன்படுத்துபவர் உடலுக்கு தீங்கு ஏற்படுவதோடு, பயன்படுத்தியபின் துாக்கி எறியப்படும் பாலிதீன் கவர்கள் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகின்றன. சாக்கடை கால்வாய், நீர் நிலைகளில் சேர்ந்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.
வாழை தண்டு, வாழை பட்டை, வாழை பூ, வாழைப்பழம் என வாழை மரத்தின் அனைத்து பொருட்களும் மருத்துவ குணம் கொண்டவை. திருப்பூர் மாவட்டத்தில் பாலிதீன் பயன்படுத்தும் உணவகங்கள் மீது மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து உணவகங்களிலும் பார்சலுக்கு வாழை இலை பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.