/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் நீதிமன்றம்: 3,௦௦௦ வழக்குகளுக்கு தீர்வு
/
மக்கள் நீதிமன்றம்: 3,௦௦௦ வழக்குகளுக்கு தீர்வு
ADDED : செப் 15, 2024 02:30 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்ற நிகழ்வில், 3 ஆயிரம் வழக்குகளில், மொத்தம் 64.42 கோடி ரூபாய் மதிப்பில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது.
தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், ஐகோர்ட் நீதிபதிகள் கார்த்திகேயன், மஞ்சுளா ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட நீதிபதி குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுவதும் மொத்தம், 20 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில் மொத்தம், 4,474 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 3,௦௦௦ வழக்குகளில் இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் விதமாக சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில், 515 மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளில், 36 கோடி ரூபாய்க்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது. சொத்து பிரச்னை தொடர்பான, 97 சிவில் வழக்குகள் மொத்தம் 26.30 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. குடும்ப நல வழக்குகள் நான்கில், 9 லட்சம் ரூபாய்; சமரசத்துக்குரிய சிறு குற்ற வழக்குகள், 2,316 விசாரித்து 1.2 கோடி ரூபாய்; காசோலை மோசடி வழக்குகள் 12ல், ரூபாய் 27.32 லட்சம்; வங்கி வராக்கடன்கள் 56 விசாரித்து, அதில், 53.21 லட்சம் ரூபாய் மதிப்பில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வகையில் மொத்தம், 3,௦௦௦ வழக்குகளில், 64.42 கோடி ரூபாய் மதிப்பிலான தீர்வு ஏற்படுத்தப்பட்டது.