ADDED : மார் 03, 2025 05:09 AM
அவிநாசி : அவிநாசி பேரூராட்சி, 18 வார்டுகளிலும் வசிக்கும் பொது மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் பறவைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2013 விதி 292-ன் (1,2,3 மற்றும் 4) படி உரிமம் பெற்று பிராணிகளை வளர்ப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள், பறவைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் பெற அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், வீட்டு வரி ரசீது, செல்லப்பிராணிகளின் போட்டோ, தடுப்பூசி செலுத்திய விவரம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அவிநாசி பேரூராட்சியில் பொது சுகாதார பிரிவில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக, சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி தெரிவித்தார்.