ADDED : ஜூன் 13, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட 18வது வார்டு கைகாட்டிப்புதுார் பகுதியில் சில மாதங்கள் முன் டிரான்ஸ்பார்மர் பழுதாகி தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது.
மின் வாரியம் தற்காலிகமாக பழங்கரை துணை மின் நிலையத்தில் இருந்து கைகாட்டிப்புதுார் பகுதிக்கு மின்வினியோகம் செய்து வருகிறது. குறைந்த மின்னழுத்தம் அடிக்கடி ஏற்படுகிறது. தாழ்வான மின் கம்பங்களால் பொருத்தப்பட்டுள்ள கம்பிகள் உயரம் குறைவாக செல்கின்றன. மின் விபத்து அபாயம் உள்ளது.
பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தாழ்வான மின் கம்பிகளை மாற்றவும், புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தவும் கோரி, பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர் ஸ்ரீதேவி அவிநாசி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நடந்த மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டத்தில் செயற்பொறியாளர் பரஞ்சோதியிடம் மனு அளித்தார்.