/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன
/
பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன
ADDED : ஜூலை 01, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;கருவலுார் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் கூடியது. தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் நாராயணசாமி, ஊர் நல அலுவலர் (மகளிர்) வைஜெயந்தி, மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சியில் ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டம்மற்றும் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்து கிராம சபை கூட்டத்தின் மூலம் ஒப்புதல் பெறுதல் குறித்து கருத்து கேட்பு நடைபெற்றது.
பயனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.