/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பில்லி - சூனிய மோசடி 'செயின்' பறித்த 2 பேர் கைது
/
பில்லி - சூனிய மோசடி 'செயின்' பறித்த 2 பேர் கைது
ADDED : ஜூலை 18, 2024 10:59 PM
பல்லடம்:பல்லடம் அருகே அம்மாபாளைத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் 54; விசைத்தறி தொழிலாளி. மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறார்.
இவரது வீட்டுக்கு குறி சொல்வதாக கூறி, ஈரோடு லட்சுமிபுரத்தைச் சேர்ந்த விஜய், 30 மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த மோகன், 42 ஆகிய இருவரும் வந்தனர். குடும்பத்தினருக்கு பில்லி, சூனியம் வைத்திருப்பதாகவும், இதற்கு பரிகாரம் செய்தாக வேண்டும் என்றும் ஈஸ்வரனிடம் கூறியுள்ளனர்.
இதற்காக, மூன்றே முக்கால் சவரன் செயினை ஏமாற்றி வாங்கி சென்றனர். ஏமாற்றப்பட்டதை அறிந்த ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில், இருவரையும், பல்லடம் போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், கிளை சிறையில் அடைத்தனர்.