/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைப்பு போக்குவரத்து மாற்றம்
/
குழாய் உடைப்பு போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூலை 23, 2024 11:49 PM

திருப்பூர்:குழாய் உடைப்பால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தாராபுரத்தில் சாலையில், பழைய பஸ் ஸ்டாண்ட் இடைப்பட்ட பகுதியில் நல்லுார் பகுதிக்கு நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இரண்டாம் குடிநீர் திட்டத்தின் கீழ், குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இக்குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதே நேரம், புதைவட மின் கம்பியும் பழுதாகியும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. குழாய் மற்றும் மின் பராமரிப்பு பணிக்காக, அவ்வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தாராபுரத்தில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரும் வாகனங்கள், சி.டி.சி,, காங்கயம் கிராஸ் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. எதிர்புறம் செல்லும் வாகனங்கள் நொய்யல் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.