/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் வழி 'காஸ்' மாசு மாயமாகும்
/
குழாய் வழி 'காஸ்' மாசு மாயமாகும்
ADDED : ஜூன் 12, 2024 10:45 PM
திருப்பூர் : ''திருப்பூர் பனியன் மற்றும் சார்ந்துள்ள தொழிற்சாலைகளுக்கு, குழாய் வழியாக காஸ் வினியோகம் செய்யப்பட வேண்டும்'' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ரைசிங் சங்க தலைவர் ராமசாமி கூறியதாவது:
திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகளில், ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளருக்கு பாதுகாப்பான வீட்டு வசதியை ஏற்படுத்த வேண்டும். மரங்களை வெட்டி, விறகாக பயன்படுத்துவது இன்றும் தொடர்கிறது. அதிக விறகு எதிர்த்து, 'ஸ்டீம்' உருவாக்கி, தொழிலில் பயன்படுத்த வேண்டியுள்ளது. மாசு ஏற்படுவதை குறைக்கும் வகையில், குழாய் வாயிலாக, தொழிற்சாலைகளுக்கு காஸ் வழங்கும் திட்டத்தை திருப்பூரில் செயல்படுத்த வேண்டும்.
கொச்சியில் இருந்து கர்நாடகா செல்லும் குழாய் வழி காஸ் பாதையால் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது. குறிப்பாக, திருப்பூர் நகரப்பகுதி சென்றால், நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு குறையும். இதன்மூலம் வர்த்தக போட்டியை குறைப்பதுடன், சுகாதாரமாக சுற்றுப்புறத்தை பராமரிக்கவும், சுகாதாரமாக வாழவும் வாய்ப்பு கிடைக்கும்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். இதனால், பாலக்காடு, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட தொழிலாளர்கள் அதிகம் பயன்பெறுவர். புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு, விரைவில் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில், திருப்பூர் பின்னலாடை தொழில் மேம்பாட்டுக்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.