ADDED : ஜூன் 25, 2024 01:52 AM
- நமது நிருபர் -
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க நிர்வாக குழு கூட்டம், சி.ஐ.டி.யு., மாவட்ட குழு அலுவலகத்தில், மாவட்ட தலைவர் கவுதமன் தலைமையில் நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பொருட்கள் வழங்குவதில், ரேஷன் விற்பனையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
அனைத்து கார்டுதாரர்களுக்கும், அனைத்து பொருட்களையும் நுாறு சதவீதம் முழுமையாக ஒதுக்கீடு செய்யவேண்டும். இடம்பெயர்ந்தோருக்கு விற்பனை செய்வதை கணக்கிட்டு, பத்து சதவீதம் கூடுதலாக பொருட்கள் வழங்க வேண்டும்.
உணவு பொருட்களை சரியான எடையில், சணல் சாக்குகளில் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை, ஆண்டு ஊதிய உயர்வு, நிலை ஊதியம் ஆகியவற்றை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை 12ம் தேதி, கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.