/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு திட்டம்; இரண்டே நாளில் 2.8 டன் சேகரிப்பு
/
பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு திட்டம்; இரண்டே நாளில் 2.8 டன் சேகரிப்பு
பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு திட்டம்; இரண்டே நாளில் 2.8 டன் சேகரிப்பு
பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு திட்டம்; இரண்டே நாளில் 2.8 டன் சேகரிப்பு
ADDED : பிப் 26, 2025 04:22 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில், 2.8 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் நடப்பாண்டு, மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் அனைத்து மாவட்டங்களிலும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு எறியப்படும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், மாசுகட்டுப்பாடு வாரியமும் இணைந்து, கடந்த ஜன., 25 மற்றும் இம்மாதம், 22ம் தேதி பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, காங்கயம், திருமுருகன்பூண்டி, பல்லடம், உடுமலை, வெள்ளகோவில் நகராட்சிகள், அவிநாசி, கனியூர், கண்ணிவாடி, குளத்துப்பாளையம், குன்னத்துார், மடத்துக்குளம், முத்துார், சாமளாபுரம், ஊத்துக்குளி பேரூராட்சிகளில் நீர் நிலைகள், கோவில், அரசு பள்ளி, கல்லுாரிகள், குடியிருப்பு பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள், பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பில் ஈடுபட்டனர். மொத்தம் 2.8 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
'பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கும், மறு சுழற்சி செய்யமுடியாதவை சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாகவும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. மாதந்தோறும், 4வது சனிக்கிழமை பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு திட்டம் தொடர்ந்து செயல்டுத்தப்படும்.
அடுத்த நிகழ்வு, வரும் மார்ச் 22ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தை ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவு இல்லாத மாநிலமாக்கும் முக்கியமான இம்முயற்சியில், அனைவரும் பங்கேற்கவேண்டும்,' என, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.