/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீட்' தேர்வுக்கு மறுநாள் பிளஸ் - 2 முடிவு
/
'நீட்' தேர்வுக்கு மறுநாள் பிளஸ் - 2 முடிவு
ADDED : மே 03, 2024 02:04 AM

திருப்பூர்:கடந்த ஆண்டு, மருத்துவப்படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு, மே, 7ல் நடந்தது. ஒரு நாள் முன்னதாக, மே, 6ல், பிளஸ் 2 பொதுதேர்வு முடிவு வெளியாக இருந்தது.
பொதுத்தேர்வு முடிவை பார்த்த மறுநாளே, 'நீட்' தேர்வு மாணவர் எழுதும் போது, மனரீதியான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்ப்பு எழுந்தது.
தேர்வு முடிவு இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு, மே, 8ம் தேதி வெளியானது. 'நீட்' தேர்வு எழுதிய பின், மாணவ - மாணவியர் தேர்வு முடிவை அறிந்தனர். இந்நிலையில், நடப்பாண்டு 'நீட்' தேர்வு வரும் 5ம் தேதி நடக்கிறது.
பொதுத்தேர்வு முடிவுகள், 6ம் தேதி வெளியாகிறது. 'நீட்' தேர்வுக்கு பின், பொதுத்தேர்வு முடிவு என்பதால், மாணவர் சங்கடம் தவிர்க்கப்பட்டுள்ளது.