/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 1 துணைத்தேர்வு இன்று ஹால் டிக்கெட்
/
பிளஸ் 1 துணைத்தேர்வு இன்று ஹால் டிக்கெட்
ADDED : ஜூன் 25, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;மே 14ம் தேதி, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தோல்வியை தழுவிய மற்றும் தேர் வெழுதாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூலை, 2 முதல் 9ம் தேதி வரை நடக்கிறது.
ஹால்டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரில் இன்று வெளியிடப்படுகிறது. ஹால்டிக்கெட்டை கட்டாயம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
26 பேர் 'ஆப்சென்ட்'
பிளஸ் 2 துணைத்தேர்வு நேற்று துவங்கியது. மாவட்டத்தின் ஐந்து மையங்களில் தமிழ்த்தேர்வு நேற்று நடந்தது. 185 பேர் விண்ணப்பித்த நிலையில், 26 பேர் பங்கேற்கவில்லை. இன்று ஆங்கிலத்தேர்வு நடக்கிறது. ஜூலை முதல் வாரம் தேர்வுகள் முடிகிறது.