/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு; திருப்பூருக்கு மூன்றாவது இடம்
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு; திருப்பூருக்கு மூன்றாவது இடம்
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு; திருப்பூருக்கு மூன்றாவது இடம்
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு; திருப்பூருக்கு மூன்றாவது இடம்
ADDED : மே 15, 2024 12:26 AM
திருப்பூர்:பிளஸ் 1 தேர்வில் கடந்தாண்டு, மாநில அளவில் முதல் ரேங்க் பெற்ற திருப்பூர், இம்முறை மூன்றாமிடம் பெற்றது.
நேற்று காலை, 9:30 மணிக்கு, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. மாவட்டத்தில் உள்ள, 216 பள்ளிகள் வாயிலாக, 26 ஆயிரத்து 164 பேர் தேர்வெழுதினர்; இதில், 24 ஆயிரத்து 917 பேர் தேர்ச்சி பெற்று, 95.23 சதவீத தேர்ச்சி விகிதத்துடன், மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றது.
தனியார் பள்ளிகள்
மாவட்டத்தில் உள்ள, 112 மெட்ரிக்., பள்ளிகளில், 9,889 பேர் தேர்வெழுதியதில், 9,816 பேர் தேர்ச்சி பெற்றனர்; வெறும், 73 பேர் மட்டுமே தோல்வியடைந்தனர். இது, 99.26 சதவீதம் தேர்ச்சி விகிதமாகும். 9 சுயநிதி பள்ளிகள் வாயிலாக, 806 பேர் தேர்வெழுதியதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர்; இது, 100 சதவீத தேர்ச்சி.
உதவி பெறும் பள்ளிகள்
மாவட்டத்தில் உள்ள, 18 உதவி பெறும் பள்ளிகளில், 3,226 மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில், 3,017 பேர் தேர்ச்சி பெற்றனர்; 209 பேர் தோல்வியடைந்தனர். இது, 93.52 சதவீதம் தேர்ச்சி விகிதம்.
அரசு பள்ளிகள்
மாவட்டத்தில், 69 அரசுப்பள்ளிகளில், 9,211 மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில், 8,477 பேர் தேர்ச்சி பெற்றனர்; 734 பேர் தோல்வியடைந்தனர். இது, 92.03 சதவீதம். திருப்பூர் நகரில் உள்ள, 8 மாநகராட்சி பள்ளிகளில், 3,032 பேர் தேர்வெழுதியதில், 2,801 பேர் தேர்ச்சி பெற்றனர்; 231 பேர் தோல்வி யடைந்தனர். இது, 92.38 சதவீதம் தேர்ச்சி விகிதம்.
'தனித்தேர்வுக்குதயார்படுத்துங்க!'
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:
பிளஸ் 1 பொதுத்தேர்வில், கடந்தாண்டு முதலிடம் பெற்ற நிலையில், இந்தாண்டு, மூன்றாமிடம் பிடித்தது, சற்றே ஏமாற்ற மளித்தாலும், தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். தோல்வியடைந்த மாணவர் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, அடுத்த மாதம் நடக்கவுள்ள தனித்தேர்வுக்கு தயார்படுத்த உள்ளோம்.
இதற்கான பணியை மேற்கொள்ள, பள்ளி தலைமையாசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'இடைநிற்றலே இருக்கக்கூடாது' என்பதில், கவனமாக உள்ளோம். நடப்பு கல்வியாண்டில், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தவும், கல்வியை மேம்படுத்தவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

