/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளை ஆஷ் கற்கள் 'தாறுமாறு' ஸ்மார்ட் ரோடு நிலை பரிதாபம்
/
பிளை ஆஷ் கற்கள் 'தாறுமாறு' ஸ்மார்ட் ரோடு நிலை பரிதாபம்
பிளை ஆஷ் கற்கள் 'தாறுமாறு' ஸ்மார்ட் ரோடு நிலை பரிதாபம்
பிளை ஆஷ் கற்கள் 'தாறுமாறு' ஸ்மார்ட் ரோடு நிலை பரிதாபம்
ADDED : ஜூலை 06, 2024 01:05 AM

திருப்பூர், குமார் நகரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ஸ்மார்ட் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
அவிநாசி ரோட்டிலிருந்து, பி.என்., ரோட்டை இணைக்கும், 60 அடி ரோடாக உள்ளது. கான்கிரீட் தளமாக ரோடு மாற்றப்பட்டது. ரோட்டின் ஓரங்களில் நடை பாதை; அலங்கார தெரு விளக்குகள்; மழை நீர் வடிகால் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டன. ரோட்டின் இரு பகுதியிலும் பிளை ஆஷ் கற்கள் பதித்து பாதசாரிகள் பயன்படுத்தும் விதமாக நடைபாதை அமைக்கப்பட்டது. குழாய் பதிப்பு பணிக்காக இந்த பிளை ஆஷ் கற்கள் அகற்றப்பட்டன. அதன் பின் இதை முறையாக மீண்டும் பொருத்தாமல் தாறுமாறாக கிடப்பதோடு, பாதசாரிகளையும் அவதிப்படுத்தும் விதமாக, ஆபத்தான நிலையில் உள்ளது.