/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.எம்.எஸ்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பி.எம்.எஸ்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 20, 2024 11:09 PM
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தின், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், வரும், 28ம் தேதி சுற்றுச்சூழல் தினத்தை 10 இடங்களில் கொண்டாடுவது, வரும், செப்., 17ம் தேதி தேசிய தொழிலாளர் தினம் மற்றும் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில், 30 இடங்களில் கொடியேற்றி நிகழ்ச்சி நடத்துவது.
வரும், 22ம் தேதி மாலை விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய தொழிலாளர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருப்பூரில் நடத்துவது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் மாதவன், செயல் தலைவர் செந்தில், போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.