/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமிக்கு மிரட்டல் வாலிபர் மீது 'போக்சோ'
/
சிறுமிக்கு மிரட்டல் வாலிபர் மீது 'போக்சோ'
ADDED : ஜூன் 26, 2024 10:57 PM

திருப்பூர் : மூலனுாரை சேர்ந்த தம்பதியின் மகள், பிளஸ் 1 படித்து வருகிறார். கரூர், விஜயமங்கலம், வஞ்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த, விக்னேஷ், 27 என்ற வாலிபருடன், சிறுமி இன்ஸ்டாகிராமில் பழகி வந்தார்.
ஒரு கட்டத்தில், ஆபாசமாக பேசி, தன் மொபைல் போனில், 'ரெக்கார்டு' செய்து கொண்ட விக்னேஷ், 'தான் கூறும் இடத்துக்கு நேரில் வர வேண் டும்; இல்லையென்றால், சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன்,' என, மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமி, பெற்றோரிடம் கூறினார். உடனே, தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், விக்னேைஷ, 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின், தாராபுரம் ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், சிறையில் அடைத்தனர்.