ADDED : ஏப் 15, 2024 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நடப்பு ஆண்டுக்கான உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி பூச்சொரிதல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. விழாவில் இன்று இரவு, 8:15 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும் 18ம் தேதி இரவு, 12:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கிராம சாந்தியும், 19ம் தேதி மதியம், 1:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும் 25ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

