/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிரைவர், நடத்துனர்களுக்கு போலீசார் 'அட்வைஸ்'
/
டிரைவர், நடத்துனர்களுக்கு போலீசார் 'அட்வைஸ்'
ADDED : செப் 05, 2024 12:46 AM
பல்லடம் : பல்லடத்தில் இருந்து, வெளியூர் செல்வோர் அரசு மற்றும் தனியார் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.
இதுகுறித்து, பல்லடம் போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'பஸ் படிக்கட்டுகளில், மாணவர்கள் தொழிலாளர்கள் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதற்கு, பஸ் ஓட்டுனர், நடத்துனர்கள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
அதிவேகமாக பஸ் இயக்குவதுடன், படிக்கட்டு பயணத்தை அனுமதித்தால், சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனரின் லைசன்ஸ் மற்றும் பஸ் உரிமம் ரத்து செய்யப்படும்,' என்றனர்.
முன்னதாக, அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர் நடத்துனர்களிடம், இது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸை போக்குவரத்து போலீசார், டிரைவர், நடத்துனர்களுக்கு வினியோகித்தனர்.